உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொங்கல் அறுவடைக்கு கரும்புகள் தயார் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு

பொங்கல் அறுவடைக்கு கரும்புகள் தயார் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு

பள்ளிப்பாளையம், டிச. 27-சமயசங்கிலி சுற்று வட்டார பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.பள்ளிப்பாளையம் அடுத்த கரமேடு, சமயசங்கிலி, செங்குட்பாளையம், தொட்டிபாளையம், சில்லாங்காடு, பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள், பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில், 300 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளதால், கரும்பு சாகுபடி நல்ல வளர்ச்சி பெற்று, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளதால், விரைவில் அறுவடை பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த கரும்பு வியாபாரிகள், தற்போதே வயல்வெளிகளுக்கு நேரடியாக வந்து கரும்புகளை பார்வையிடுகின்றனர். இந்தாண்டு, கரும்பு நன்கு வளர்ந்துள்ளதால், கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக விலை கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதுகுறித்து, சமயசங்கிலி கரும்பு விவசாயி ஒருவர் கூறுகையில், 'கடந்தாண்டு ஒரு கரும்பு, 25 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். இந்தாண்டு, 30 ரூபாய்க்கு எதிர்பார்க்கிறோம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !