உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்

நாமக்கல், கொல்லிமலை தாலுகா, ஆரியூர் புதுவளவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது, அவர் பேசியதாவது:கல்வி மற்றும் ஒழுக்கத்தை, இரு கண்களாக மாணவ, மாணவியர் கருத வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதுடன், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, மலைவாழ் பகுதியில் வாழக்கூடிய மாணவர்கள் வாழ்வில் மேம்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்குவதுடன், 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்', 'தமிழ் புதல்வன்' போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அவற்றை முறையாக மாணவர்கள் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு உற்ற துணையாக இருந்து, வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 'போதையில்லா' இந்தியா- விழிப்புணர்வு உறுதி மொழியை, முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமையில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வருகையையொட்டி, மரக்கன்று நட்டு வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் காளிதாஸ், அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் வரதராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !