உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சொத்து தகராறில் பயங்கரம்; தந்தையை கொன்ற மகன் கைது

சொத்து தகராறில் பயங்கரம்; தந்தையை கொன்ற மகன் கைது

பள்ளிப்பாளையம் : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, மொளசி அடுத்த வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளையப்பன், 70; விவசாயி. இவரது இளைய மகன் தாமோதரன், 47, லாரி டிரைவர். தந்தை, மகன் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும், தந்தை, மகனுக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தாமோதரன், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து இளையப்பன் தலையில் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த மொளசி போலீசார், தாமோதரனை நேற்று காலை, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை