வையப்பமலை கோவிலில் வரும் 11ல் தைப்பூச விழா
மல்லசமுத்திரம்: வையப்பமலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 11ம் தேதி தைப்பூச விழா நடக்க உள்ளது.மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும், 11ல் தைப்பூ-சத்தை முன்னிட்டு காலை, 8:00 மணிக்கு சந்தைப்பேட்டை விநாயகர் கோவிலில் இருந்து, மலைக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவர். 11:00 மணி முதல் 12:00 மணி வரை தைப்பூச அபிேஷக ஆராதனை நடைபெறுகிறது.