உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மதுக்கடையால் மக்கள் குடியிருக்க முடியவில்லை

மதுக்கடையால் மக்கள் குடியிருக்க முடியவில்லை

பள்ளிப்பாளையம்: மதுக்கடையால் மக்கள் குடியிருக்க முடியவில்லை. மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, பள்ளிப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் ஆவேசமாக பேசினார்.பள்ளிப்பாளையம் நகராட்சி, சாதாரண கூட்டம் மன்ற அரங்கில், நேற்று நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலையில் நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:யுவராஜ், தி.மு.க.,: எனது வார்டில் மதுக்கடை செயல்படுகிறது. பாரில் இரவு, பகலாக மது பாட்டில் விற்பனை நடந்து வருகிறது. இதனால், 'குடி'மகன்களிடையே தினமும் அடிதடி, வெட்டு, குத்து சம்பவங்கள் நடப்பதால், அப்பகுதியில் மக்கள் குடியிருக்கவே முடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அருகே பள்ளி உள்ளதால் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.சரவணன், அ.தி.மு.க.,: பெரியார் நகர் ஆற்றோரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் நுாலகம் அமைக்க வேண்டும். ஆற்று படித்துறையில் இரவு நேரத்தில், 'குடி'மகன்கள் மது அருந்துகின்றனர். இது பாராக மாறிவிட்டது.ஜெயா, அ.தி.மு.க.,: பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படும், பொது கழிப்பிடத்தை அகற்றக்கூடாது.செந்தில், அ.தி.மு.க.,: எனது வார்டில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை மாற்ற வேண்டும். நான் எது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. கவுன்சிலரை மதிப்பதில்லை.செல்வராஜ், நகராட்சி தலைவர்: வார்டுதோறும் கொசு மருந்து அடிக்க வேண்டும். மருந்து அடித்தவுடன் கவுன்சிலர்களிடம் பணியாளர்கள் கையெழுத்து வாங்க வேண்டும். கவுன்சிலர்கள் தெரிவிக்கும் அடிப்படை பணிகளை உடனுக்குடன் பணியாளர்கள் செய்ய வேண்டும். மதுக்கடை இடமாற்றம் குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பெரியார்நகர் படித்துறை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலமுருகன், துணைத்தலைவர்: சாலையை பறித்து அங்கு வேலை முடிந்தவுடன் தான், மற்ற இடத்தில் சாலை பறிக்க வேண்டும். எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் சாலையை பறிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.தாமரை, கமிஷனர்: அதிகாரிகள், பணியாளர்களிடம் வேலை கொடுத்தால் செய்வதில்லை. கோபம் அடைகிறார்கள். வரி வசூல் செய்ய வார்டு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ