மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
29-Dec-2024
துத்திக்குளம் புனித வனத்து சின்னப்பர்ஆலயத்தில் வரும் 18ல் தேர்த்திருவிழாநாமக்கல்: சேலம் மறைமாவட்டம், சேந்தமங்கலம் பஞ்., துத்திக்குளத்தில், புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டு தோறும், தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா, வரும், 17ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, நாமக்கல் மறைமாவட்ட முதன்மை குரு, தாமஸ் மாணிக்கம் தலைமையில், கொடியேற்றம், செபமாலை, திருப்பலி நடக்கிறது.வரும், 18ல், புனித வனத்து அந்தோணியார் திருவிழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கொசவம்பட்டி ஆர்.சி., பங்கு தந்தை அமல் மகிமைதாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளும் புனிதர்கள், முக்கிய வீதி வழியாக பவனி வந்து, பக்தர்களுக்கு ஆசீ வழங்குகின்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்குகின்றனர்.வரும், 19ல், புனித வனத்து சின்னப்பர் திருவிழா நடக்கிறது. அதையொட்டி, மாலை, 6:00 மணிக்கு, கெபியில் நவநாள் செபமாலை, திருப்பலி நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் பங்கு தந்தை அருள்ராஜ், கோவில் பிள்ளை பிலவேந்திரன், மணியக்காரர் ஜான்பீட்டர், நாட்டாமை பன்னீர்செல்வம், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
29-Dec-2024