உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வரும் 2026 தேர்தலில் தி.மு.க., அரசு உறுதி

வரும் 2026 தேர்தலில் தி.மு.க., அரசு உறுதி

ராசிபுரம்: ''வரும், 2026ம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது,'' என, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்தார்.ராசிபுரம் சட்டசபை தொகுதி, தி.மு.க., கிளை வார்டு செயலாளர்கள் தேர்தல் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ஜெகநாதன், துரைசாமி, ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கு ராசிபுரம் சட்டசபை தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி பார்வையாளர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.தொடர்ந்து, ராஜேஸ்குமார் எம்.பி., பேசுகையில், ''வரும், 2026ல் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்திருந்தால் கூட்டுறவு வங்கிகள் திவால் ஆகி இருக்கும். தி.மு.க., ஆட்சி வந்த பிறகு தான் கூட்டுறவு வங்கி மீண்டும் புத்துணர்ச்சி பெற்று, விவசாயிகளுக்கு கடன் வழங்கி உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை