மேலும் செய்திகள்
பா.ஜ.,-அ.தி.மு.க., எதிர்ப்பு; நகராட்சி டெண்டர் ரத்து
2 minutes ago
காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் வருகை
2 minutes ago
சேந்தமங்கலம்: கார்த்திகை மாத பவுர்ணமி மற்றும் தீபத்தையொட்டி, சேந்த மங்கலத்தில் அமைந்துள்ள கவுந்திரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.கார்த்திகை தீபத்தன்று, சிவபெருமானை ஜோதி வடிவில் தரிசிப்பதற்காக திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றுவர். அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம். அதன்படி நேற்று மாலை 6:00 மணியளவில் சேந்தமங்கலத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் பனை ஓலையை கூம்பு வடிவில் அமைத்து, கோவில் முன் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.* திருச்செங்கோடு மலையில், அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் கோவில்கள் உள்ளன. கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஆதிகேசவபெருமாள் பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, 700 கிலோ நெய், 500 கிலோ திரி பயன்படுத்தப்பட்டது.
2 minutes ago
2 minutes ago