புது மாப்பிள்ளை விபரீத முடிவு
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, கவுண்டம்பாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஜோதிமணி, 22. இவர், ஐந்து நாட்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டிற்குள் சென்றவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜோதிமணி உறவினர்கள் அரசு மருத்துவமனைக்குள் கூட்டமாக வந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கண்ணாடி கதவு உடைந்தது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.