மேலும் செய்திகள்
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
27-Jun-2025
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பொன்னேரியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு, புகுந்த மர்ம நபர்கள், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர்.அதிகாலை, கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Jun-2025