உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் /  பால் விலையை உயர்த்த கோரியவர்கள் கைது

 பால் விலையை உயர்த்த கோரியவர்கள் கைது

ப.வேலுார்: பால் விலையை உயர்த்த கோரி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, கந்தம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டம், நேற்று காலை நடக்க இருப்பதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். ஆனால், போராட் டத்தை முறியடிக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோனுாரை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமியை, நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது வீட்டில், பரமத்தி போலீசார் கைது செய்தனர். இதேபோல, நல்லியாம்பாளையத்தை சேர்ந்த, தமிழக இளம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சவுந்தர்ராஜன், 33, ராசிபுரம், பாச்சல் பகுதியை சேர்ந்த குப்பண்ணமுத்து, 71, கீழ் சாத்தம்பூரை சேர்ந்த கோவிந்தசாமி, 68, சுப்பிரமணியன், 70, ஆகியோரை கைது செய்து விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ