உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயிக்கு மிரட்டல் விடுத்த : 3 பேர் கைது

விவசாயிக்கு மிரட்டல் விடுத்த : 3 பேர் கைது

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, நாவல்பட்டி காட்டூரை சேர்ந்தவர் கணேசன் மகன் முருகேசன், 50; விவசாயி. இவரது தோட்டத்திற்கு அருகே வசிப்பவர் எல்லையப்பன் மகள் லட்சுமி, 57; இவரது அண்ணன் பழனிசாமி, 70, கந்தசாமி மகன் வையாபுரி, 70; முருகேசனுக்கும், லட்சுமி தரப்பினருக்கும் நீண்ட நாட்களாக வழித்தட பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த, 14ல் தனியாக நடந்து சென்ற முருகேசனுக்கு, லட்சுமி உள்பட மூவர், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முருகேசன் ஆயில்பட்டி போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று லட்சுமி, பழனிசாமி, வையாபுரி உள்ளிட்ட, மூவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை