உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற மூவர் சிக்கினர்

லாட்டரி விற்ற மூவர் சிக்கினர்

குமாரபாளையம்:பள்ளிப்பாளையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது, அண்ணா நகர், ஆவாரங்காடு உள்ளிட்ட பகுதிகளில், போலி லாட்டரி விற்பது தெரியவந்தது.நேரில் சென்ற போலீசார் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சண்முகம், 38, புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன், 52, சுபாஷ் நகரை சேர்ந்த ஞானசேகரன், 38, ஆகிய மூவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி