| ADDED : மே 24, 2024 06:55 AM
திருச்செங்கோடு : திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.திருச்செங்கோடு, வைகாசி விசாக தேர்திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வர்க்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். நேற்று தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.தேர் நிலை பெயர்த்து பூக்கடை கார்னரில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும் வடம் பிடித்தல் நடைபெறும். ஆயிரக்கணக்கான பகத்ர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.