உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாளை ஆடி பண்டிகை; வாழைத்தார் விலை உயர்வு

நாளை ஆடி பண்டிகை; வாழைத்தார் விலை உயர்வு

ப.வேலுார்: நாளை ஆடி பண்டிகையால், வாழைத்தார் விலை உயர்ந்து விற்-பனை செய்யப்பட்டது.ப.வேலுார் தாலுகா பகுதியில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர். இதில், பூவன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்-போது வாழைத்தார்களை அறுவடை செய்து வருகின்றனர். இவற்றை, ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்-கெட்டில் விற்பனை செய்கின்றனர்.நாளை, ஆடி பண்டிகையை முன்னிட்டு புதுமண தம்பதியர் காவிரி ஆற்றுக்கு சென்று வழிபாடு செய்வர். மேலும், கோவில்-களில் சிறப்பு பூஜை நடைபெறும். இதையொட்டி, நேற்று நடந்த ஏலத்தில், 1,500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 350 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று, 500 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 500 ரூபாய்; 350 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 600 ரூபாய்; மொந்தன் ஒரு காய், 5 ரூபாய்க்கு விற்றது, 10 ரூபாய் என, விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை