உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து

டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து

சேந்தமங்கலம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த, 15 பேர், நேற்று முன்-தினம், கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள், கொல்லி-மலையில் உள்ள மாசிலா அருவி, நம் அருவியில் குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்றனர். பின், ஊருக்கு செல்வதற்காக, மாலை, 6:00 மணியளவில், 3வது பாதையான சேரடியில் இருந்து தம்மம்-பட்டி சாலையில் சென்றுள்ளனர்.அப்போது, டூரிஸ்ட் வேன் வேலிக்காடு என்ற இடத்தில் சென்ற-போது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த சுற்றுலா பய-ணிகள் அலறும் சத்தம் கேட்டு, மலைவாழ் மக்கள் அங்கு திரண்-டனர். அவர்கள், விபத்தில் சிக்கிய, 7 பேரை மீட்டு, ஆத்துார் ஜி.ஹெச்.,ல் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை