மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய படகு இல்லம்
28-Oct-2024
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்-ளது. இந்த மலைக்கு, விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கி-ழமைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்-றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதுபோல் வரும் சுற்றுலா பயணிகள், மாசிலா அருவி, நம்அருவிகளில் குளித்து முடித்து, அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கையம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.வெளியூரில் இருந்து வரும் இளைஞர்கள், புதிதாக மலைக்கும் வரும் சுற்றுலா பயணிகள் அரப்பளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள, 1,060 படிக்கட்டுகளில் இறங்கி ஆகாய கங்கை நீர்வீழ்ச்-சிக்கு சென்று உற்சாக குளியல் போட்டு செல்கின்றனர். 160 அடி உயரத்தில் இருந்து பால்போல் கொட்டும் இந்த மூலிகை நிறைந்த ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளித்தால் பல்வேறு நோய்கள் தீரும் என்பதால், ஏராளமானோர் மிகவும் சிரமப்பட்டு இந்த அருவிக்கு வந்து குளித்து செல்கின்றனர்.
28-Oct-2024