உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

சேந்தமங்கலம்:பள்ளி, கல்லுாரி விடுமுறையால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. தற்போது, பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள், மாசிலா அருவி, நம்மருவி, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், மாசி பெரியசாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சமைத்து எடுத்து வந்த உணவுகளை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால், ஆங்காங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும், வாசலுார்பட்டி படகு இல்லம், வியூ பாயின்ட்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை