உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோபுரம் கட்டுமான பணி; முதல்வர் துவக்கி வைப்பு

கோபுரம் கட்டுமான பணி; முதல்வர் துவக்கி வைப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்துாரில், அத்தனுார் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், உபயதாரர்கள் நிதி உத-வியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், கோவில் முன்புறம் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி மற்றும் கோவில் பிரகார மண்டபம் கட்டும் பணி ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்-கோடு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல், உதவி ஆணையர் இளையராஜா, சித்தாளந்துார் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ