உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம்

டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் திருமலை தலைமை வகித்தார். செயல் அலு-வலர் மூவேந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில், குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்-னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராமசபை கூட்டங்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 15வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.தடுமாறி விழுந்துஇருவர் படுகாயம்குமாரபாளையம்: ஈரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ், 51, நாச்சிமுத்து, 40; கட்டட தொழிலாளர்கள். கடந்த, 30ல் கட்டட வேலை சம்பந்தமாக, 'ஹோண்டா ஆக்டிவா' டூவீலரில் சங்ககிரி சென்றனர். டூவீலரை, கோவிந்தராஜ் ஓட்டினார். நாச்சிமுத்து, பின்னால் அமர்ந்து சென்றார்.தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, சாலையோரமாக இருந்த மணல் திட்டில் மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்-தனர். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்-தனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை