கோவில் பாதை ஆக்கிரமிப்பு மறியலால் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மரூர்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டியில், 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், அங்குள்ள பாறை புறம்போக்கு பகுதியில், காளியம்மன் சிலை வைத்து பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகின்றனர்.இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் கோவிலுக்கு செல்லும் பாதையில், இரண்டு அடி உயரத்திற்கு மண்ணை கொட்டி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கோவிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறி, நைனாமலை செல்லும் சாலையில், செல்லிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, நேற்று காலை, 12:00 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே அவ்வழியாக வந்த, எம்.பி., மாதேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோவிலுக்கு செல்லும் பாதையை சரிசெய்து தருவதாக உறுதியளித்தார். அதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.