மேலும் செய்திகள்
மின்வாரிய சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
30-Apr-2025
நாமக்கல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யு., சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நாமக்கல்-பரமத்தி சாலையில் செயல்படும், அரசு போக்குவரத்து பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் முருகராஜ் தலைமை வகித்தார். அதில், பிற துறைகளை விட குறைவாக உள்ள, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஏற்ற தாழ்வை சரி செய்யும் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 20 மாதத்திற்கு அரியர்ஸ் தொகை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒப்பந்த காலத்திற்கான முழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. டி.டி.எஸ்.எப்., நிர்வாகி மனோகரன், கிளை செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
30-Apr-2025