உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் தாக்கிய தொழிலாளிக்கு சிகிச்சை

மின்சாரம் தாக்கிய தொழிலாளிக்கு சிகிச்சை

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பிரிவு சாலை அருகே, மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று கள்ளக்குறிச்சியை சேர்ந்த துரை, 45, என்பவர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த துரை மயக்கமடைந்தார். அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி