உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் மரக்கன்று நடும் விழா

கொல்லிமலையில் மரக்கன்று நடும் விழா

சேந்தமங்கலம்:கொல்லிமலை, அரியூர்நாடு பஞ்., மற்றும் மாவட்ட மக்கள் கல்வி நிறுவன அமைப்புகள் இணைந்து நம்மருவி நீர்வீழ்ச்சி பகுதியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அருவிக்கு செல்லும் வழியை துாய்மைப்படுத்தும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. கொல்லிமலை ஊராட்சி முன்னாள் தலைவர் நாகலிங்கம், பணியை தொடங்கி வைத்தார். மக்கள் கல்வி நிறுவன அமைப்பு இயக்குனர் கூறுகையில், 'கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் தையல் பயிற்சி, மோட்டார் வாகனங்களை பழுது பார்க்கும் பயிற்சி போன்றவை மக்கள் கல்வி நிறுவனம் மூலம் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.மேலும், இவ்விழாவில் துாய்மை பணியாளர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் அருவி பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பைகளை அகற்றினர். தொடர்ந்து அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த அறிவுறுத்தினர். தொடர்ந்து, நம்மருவி பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை