உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஹல்காம் தாக்குதலில்இறந்தவர்களுக்கு அஞ்சலி

பஹல்காம் தாக்குதலில்இறந்தவர்களுக்கு அஞ்சலி

வெண்ணந்தூர்:ஜம்மு-காஷ்மீரின், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு, வெண்ணந்துார் பா.ஜ., சார்பில் அண்ணாதுரை சிலை பஸ் ஸ்டாப் அருகே மோட்ச தீபம் ஏற்றி, மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ., ஒன்றிய தலைவர் திவ்யா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார். ராசிபுரம் ஒன்றிய முன்னாள் தலைவர் வடிவேல், ஒன்றிய பொது செயலாளர் கந்தசாமி, துணைத்தலைவர் தனகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ