மேலும் செய்திகள்
கார் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
05-Sep-2024
நாமக்கல்:நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் சண்முகம், 59; லாரி உரிமையாளர். இவர், 2023 ஆக., 14ல், நாமக்கல் - திருச்சி சாலையில் டூ வீலரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த சண்முகம், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2023 செப்., 5ல் உயிரிழந்தார்.சண்முகம், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது, சங்க உறுப்பினர்களுக்கு அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குரூப் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் பாலிசி பெற்று பிரீமியம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சண்முகம் இறந்த பின், அவரது மனைவி, குழந்தைகள், இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், 'சண்முகத்தின் இறப்புக்கு விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணம் அல்ல; அவருக்கு இருந்து வந்த நோய் தான் காரணம்' எனக்கூறி பணம் வழங்க மறுத்துள்ளது.சண்முகத்தின் மனைவி மற்றும் வாரிசுகள், இன்சூரன்ஸ் நிறுவனம் மீது கடந்த ஜூனில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரணை முடிந்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். அதில், இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தில் இறந்தவரின் மனைவி மணி, 56, மகன் சதீஷ், 33, மகள் உமா, 31 ஆகியோருக்கு, 15 நாட்களுக்குள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
05-Sep-2024