உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

ராசிபுரம், டிச. 18-ராசிபுரம் நகராட்சி, காட்டூர் சாலை அருகே, சி.எஸ்.புரத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் சாலையில் வரிசையாக மின் கம்பங்கள் உள்ளன. இதில் வளைவான சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்துவிட்டன. கம்பத்தின் அடியில் தொடங்கி நுனி வரை, 50 சதவீதத்திற்கு மேல் பூச்சுகள் உதிர்ந்து கம்பி மட்டுமே தெரிகிறது. அதுமட்டுமின்றி கம்பம் சாய்ந்த நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரம்பத்திலேயே புகார் தெரிவித்ததும், சேதமடைந்த கம்பத்தின் அருகிலேயே புதிய கம்பத்தை நட்டுவிட்டனர்.ஆனால், பல மாதங்கள் ஆகியும் மின்கம்பிகளை மாற்றாமல் உள்ளனர். எனவே கம்பம் முழுவதும் உடைந்து விழுந்து பெரிய விபத்து ஏற்படும் முன்பு புதிய கம்பத்தில் மின்கம்பிகளை மாற்றுவதுடன் சேதமடைந்த கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ