நாமக்கல்; 'சோலார் பேனல் மூலம், 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்கலாம்' என, ஒருங்கிணைப்புக்-குழு கூட்டத்தில், கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.தமிழக மின் பகிர்மான கழகம் சார்பில், பிரத-மரின் சூரிய மின் சக்தி திட்டத்தின் கீழ், சோலார் பேனல் விற்பனையாளர்களுக்கு, 9-வது மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.இதில், கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:வீட்டு மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, 1,200 ரூபாய் கட்டணம் செலுத்தும் நுகர்வோர், இத்திட்-டத்தின் கீழ், ஒரு கிலோவாட் மின்தகடு பொருத்-தினால், 60 சதவீதம் வரை மின் கட்டணம் சேமிக்-கலாம். ஒரு கிலோவாட் மின் தகடுகள் பொருத்த, 80,000 ரூபாய் வரை செலவாகும். செலவீனத்தில், 30,000 ரூபாய் வரை மானியம் பெறலாம்.இரண்டு கிலோவாட் மின் தகடுகள் பொருத்த, 1.40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதில், 60,000 ரூபாய் வரை மானியம் பெறலாம். சூரிய மின் உற்பத்தி தகடுகள், 27 ஆண்டு வரை உத்தர-வாதத்துடன் செயல்படக்கூடியது. அதனால், இத்-திட்டத்தில் நீண்ட காலத்திற்கு பயன்பெறலாம். ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்-பத்தி தகடுகள் நாளொன்றுக்கு, 4 முதல், 5 யூனிட் வரை உற்பத்தி செய்யலாம்.இவ்வாறு அவர் பேசினார்.