மேலும் செய்திகள்
குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
08-May-2025
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் சுவாமிகள், நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வரும் வைகாசி விசாக தேர் திருவிழா, 15 நாட்கள் விமரிசையாக நடக்கும். இதன் முதல் நிகழ்ச்சியாக, நேற்று அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அப்போது, கலச பூஜை செய்த சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் முழங்க கொடியுடன் தர்ப்பை, மாவிலை, மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி, கொடிமரத்தில் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
08-May-2025