உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேகத்தடை அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் சாலை மறியல்

வேகத்தடை அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் சாலை மறியல்

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இப்பகுதியில் மீண்டும் விபத்து நடந்தது. இதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, வேகத்தடை அமைக்காத அதிகாரிகளை கண்டித்தும், அப்பகுதியில் மயான வசதி கேட்டும், மா.கம்யூ., சார்பில் அப்பகுதி மக்கள், 100க்கு மேற்பட்டோர், நேற்று மாலை, 3:30 மணிக்கு, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெப்படை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியலை கைவிட்டனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை