மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி
03-Oct-2025
ப.வேலுார்: தீபாவளியை முன்னிட்டு, ப.வேலுார் அரிமா சங்கம் மற்றும் பெண்களுக்கான கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ப.வேலுார் பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், அரிமா சங்க முதன்மை நிர்வாக அதிகாரி நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.ப.வேலுார் அரிமா சங்கத் தலைவர் அருண்குமார் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும், பெண்களுக்கான கிராம மேம்பாட்டு நிறுவனம் செயலாளர் சிவகாமவல்லி வரவேற்றார். பரமத்தி வேலுார், எம்.எல்.ஏ., சேகர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பரமத்தி வேலுார் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை பெண்களுக்கு புத்தாடை, உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர். அரிமா சங்க தலைவர் அருண்குமார், செயலாளர் அரசகுமார், சதீஷ்குமார், பொருளாளர் கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ப.வேலுார் அரிமா சங்கம் மற்றும் பெண்களுக்கான கிராமப்புற மேம்பாட்டு நிறுவன நிர்வாகிகள் செய்திருந்தனர்.
03-Oct-2025