மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ராசிபுரம்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, ராசிபுரத்தில், 6ம் ஆண்டாக மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு, நலத்-திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் நகர வளர்ச்சிக்குழு தலைவர் பாலு, ராசிபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில், 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலு-கைகள், மருத்துவ காப்பீடு அட்டை, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், குறித்தும் விளக்கமாக கூறப்பட்டது. முடிவில் மாற்றுத்திறனாளி-களின் குடும்பத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டன.