உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

கழிவு நீர் கால்வாய் அமைக்கும்பணி விரைந்து முடிக்கப்படுமா?எருமப்பட்டி, அக். 17-பொட்டிரெட்டிபட்டியில் பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை முழுமையாக முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. எருமப்பட்டி யூனியன் பொட்டிரெட்டி பட்டி பஞ்சாயத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து வரும் கழிவு நீருக்கு பஞ்., நிர்வாகம் முறையான கால்வாய் வசதி செய்யாததால் அனைத்து கழிவு நீரும் விவசாய நிலத்திற்குள் சென்றது. இதனால், பல ஏக்கர் விவசாய நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குள்ளானது. இதனால், கழிவு நீர் ஏரிக்கு செல்லும் வகையில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, மாரியம்மன் கோவிலில் இருந்து பொன்னோரி செல்லும் வழியில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்த பணி கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை, பஞ்., நிர்வாகம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை