உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் விழுந்த பெண் போராடி மீட்பு

கிணற்றில் விழுந்த பெண் போராடி மீட்பு

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம், நந்தவன தெருவை சேர்ந்தவர் மல்லிகா, 50; இவர், சற்று மனநலம் பாதித்தவர். இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை அருகே உள்ள பழமை வாய்ந்த, 100 அடி ஆழமுள்ள பொது கிணற்றில் திடீரென குதித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த குழாய்களை பிடித்துக்கொண்டார். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி பத்திரமாக மீட்டனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ