உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விஷ வண்டு கடித்து தொழிலாளி பலி

விஷ வண்டு கடித்து தொழிலாளி பலி

பள்ளிப்பாளையம், மொளசி பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியபோது, விஷ வண்டு கடித்து ஒடிசா தொழிலாளி பலியானார்.ஒடிசாவை சேர்ந்தவர் சுரேந்திராமஜி, 30; இவர், ஈரோடு அருகே, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் வேலை செய்து வந்தார். தேங்காய் குடோன் உரிமையாளர், பள்ளிப்பாளையம் அருகே, மொளசி காட்டுவேலாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்திருந்தார்.நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு, இந்த தென்னந்தோப்பில், சுரேந்திராமஜி தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது, தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்துவிட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சுரேந்திராமஜி உயிரிழந்தார். இதுகுறித்து மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ