உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜவுளி விற்பனையை முடித்து சென்ற பணியாளர் உயிரிழப்பு

ஜவுளி விற்பனையை முடித்து சென்ற பணியாளர் உயிரிழப்பு

எருமப்பட்டி, தீபாவளி விற்பனையை முடித்து விட்டு, டூவீலரில் சென்ற துணிக்கடை பணியாளர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.துறையூர் அருகே தாத்தயங்கர்பட்டி பில்லா துறையை சேர்ந்தவர் வைரமாணிக்கம், 45. இவர் நேற்று முன்தினம் இ‍ரவு, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து விட்டு, டூவீலரில் தாத்தையங்கர்பட்டிக்கு சென்றுள்ளார்.அப்போது, பொட்டிரெட்டிபட்டி அரசு பள்ளி அருகே சென்ற போது, தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதானால், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை