உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

நாமகிரிப்பேட்டை, நாமரிகிரிபேட்டை அருகே, ஒன்பதாம்பாலிகாடு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் தமிழ்செல்வன், 31. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை, முள்ளுகுறிச்சி செல்வதற்காக தனது டூவீலரில் சென்று கொண்டிருந்ததார். அப்போது தமிழ்செல்வனுக்கு பின்னால், டூவீலரில் வந்த வாலிபர் லட்சுமணன், 27, என்பவர் எதிர்பாராதவிதமாக தமிழ்செல்வன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை