உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழைப்போர் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

உழைப்போர் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், பணி நிரந்தரம் கோரி, நாமக்கல்லில் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யு., மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் பணியாற்றும் துாய்மை காவலர்களுக்கு மாத சம்பளம், 6,000 ரூபாயும், அகவிலைப்படி, 6,789 ரூபாயும் சேர்த்து, 12,780 ரூபாய் வழங்க வேண்டும். துப்புரவு பணிகள் மேல்நிலை நீர்தொட்டி இயக்குபர்களுக்கு மாத சம்பளம், 8,000 ரூபாயுடன் அகவிலைப்படி, 6,780 ரூபாயுடன் சேர்த்து, 14,780- ரூபாய் வழங்க வேண்டும் என, கோஷம் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை