உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குப்பைக்கு வைத்த தீப்பற்றி யோகா மையம் எரிந்து சேதம்

குப்பைக்கு வைத்த தீப்பற்றி யோகா மையம் எரிந்து சேதம்

குமாரபாளையம், குமாரபாளையம், குள்ளங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 45; இவர் தனக்கு சொந்தமான இடத்தில் யோகா மையம் நடத்த முருகன், 34, என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். ஜெயக்குமார் வீட்டின் முன் குப்பை குவிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 6:00 மணியளவில் மர்ம நபர்கள் அந்த குப்பைக்கு தீ வைத்துள்ளனர். இதிலிருந்து பரவிய தீ, யோகா மையத்தில் பற்றி எரிந்தது. மேலும், அருகில் இருந்த வீட்டிலும் தீ பரவி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு டூவீலர்கள் எரிந்து சேதமாகின. தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ