மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
நாமக்கல் அரசு கல்லுாரியில்'யூத் ரெட் கிராஸ்' கருத்தரங்கு நாமக்கல், டிச. 11-நாமக்கல் - மோகனுார் சாலை லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளை மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் சார்பில், மாவட்ட அளவிலான, 'யூத் ரெட் கிராஸ்' தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். பெரியார் பல்கலை, 'யூத் ரெட் கிராஸ்' மண்டல ஒருங்கிணைப்பாளர் பத்மசேகரன் பங்கேற்றார். மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், முன்னாள் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட் கிராஸ் வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து, மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி பேசினார். மாவட்ட குழந்தை நல அலுவலர் சதீஷ்குமார் பேசுகையில், ''சமூக வலைதளங்களில் மாணவ, மாணவியர் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். போதை பழக்க வழக்கங்களில் அடிமையாகாமல், சுதந்திரமாக வாழ வேண்டும். நல்லொழுக்க பழக்க வழக்கங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார். நெகிழி தவிர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அனைவருக்கும், 'மஞ்சள் பை' வழங்கப்பட்டது.
03-Dec-2024
03-Dec-2024