உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி பஸ் ஸ்டாண்ட் நிலை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ஊட்டி பஸ் ஸ்டாண்ட் நிலை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ஊட்டி : ஊட்டி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பழுதடைந்து மோசமாக உள்ளதால் பயணிகள் சேற்றில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஊட்டிக்கு பஸ்களில் சுற்றுலா வரும் பயணிகள் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்குகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள இந்த பகுதி முழுவதும் பழுதடைந்து மழைநீரும், சேறும் தேங்கி நிற்கிறது. குழிகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் சேறுகளால் பொதுமக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். பல மாதங்களாக நீடிக்கும் இந்த நிலை குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல நஞ்சநாடு, எமரால்டு உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் மழைக்கு பயணிகள் ஒதுங்க கூட வழியில்லை. இதனால், மழையில் நனைந்து கொண்டே நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் பயணிகளிடையே நேற்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சங்க தலைவர் ஜனார்தனன், முருகேசன், நீலமலை தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இவற்றை வினியோகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்