உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தவர் "சஸ்பெண்ட்

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தவர் "சஸ்பெண்ட்

ஊட்டி :கோத்தகிரி அரவேணுவில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். கோத்தகிரி தாலுகாவில் இயங்கி வரும் டாஸ்மாக் பதுமான சில்லரை விற்பனை கடைகளில், நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், டாஸ்மாக் மேலாளர், ஊட்டி உதவி ஆணையர் (ஆயம்), கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) ஆகியோர் கூட்டு தணிக்கை மேற்கொண்டனர். தணிக்கையின் போது அரவேணு கடை எண் 8431ல் பணியில் இருந்த விற்பனையாளர் மனோகர் என்பவர் பீர் வகைக்கு 5 ரூபாய் அதிகம் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும், பல்வேறு மதுபானங்களும் உதிரியாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதே போல கோத்தகிரி கடை எண் 8245ல் பீர் வகைக்கு 5 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து கண்டறியப்பட்டு, விற்பனையாளர் ரமேஷ் மற்றும் மதுக்கடை உதவியாளர் ரங்கராஜ் ஆகியோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி