உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேரம்பாடி, அதிகரட்டியில் மின் தடை அறிவிப்பு

சேரம்பாடி, அதிகரட்டியில் மின் தடை அறிவிப்பு

ஊட்டி :நீலகிரி மின்பகிர்மான வட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 12ம் தேதி அத்திப்பள்ளி, சேரம்பாடி, உப்பட்டி, 13ம் தேதி அதிகரட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நடராஜன்(பொ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிங்காரா நீர் மின் திட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 12ம் தேதி காலை 9.00 மணி தல் மாலை 5.00 மணி வரை அத்திபள்ளி, சேரம்பாடி, உப்பட்டி 66-11 கேவி துணை மின் நிலையத்தை சார்ந்த அத்திபள்ளி, கூடலூர், தொரப்பள்ளி, பாடந்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், நந்தட்டி, பாட்டவயல், நெலக்கோட்டை, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, சேரம்பாடி, கன்னம்பைல், நாயக்கன்சோலா, கையுண்ணி, எருமாடு, தாலூர், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி, உப்பட்டி, பொன்னானி, தேவாலா, எல்லமாலா,நாடுகானி, குந்தலாடி, பந்தலூர், அத்திகுன்னா, கொளப்பள்ளி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட்பிரேர் நம்பர் 3 டிவிஷன் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. * அதிகரட்டி 110-11 கேவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 13ம் தேதி காலை 9.00 மணி மாலை 5.00 மணி வரை அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலா, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சகொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதிநகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கமபை, பென்காம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு நடராஜன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ