உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆசிரியர் வட்டார கிளை கூட்டம்

ஆசிரியர் வட்டார கிளை கூட்டம்

கூடலூர் : தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை கூட்டம் கூடலூரில் நடந்தது. கூட்டத்தில், சமச்சீர் கல்வி இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கியது போல், ஊதியம் 4,200 ரூபாய் வழங்க வேண்டும்; ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை நேர்மையாக நடத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் காலியாக பணியிடங்களையும் மற்றும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுயநிதி கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணங்களை முறைபடுத்த வேண்டும்; பெட்ரோலிய பொருள்கள் விலையை குறைக்க தமிழக அரசு மத்திய அரசை நிர்பந்தப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி மணிவாசகம் வரவேற்றார். கிளை தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுனில்குமார், பொருளாளர் செல்வி ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை