உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரத்தில் மோதிய சுற்றுலா வேன்

மரத்தில் மோதிய சுற்றுலா வேன்

கூடலூர் :கூடலூர் கோழிக்கோடு சாலை மரப்பாலத்தில் சுற்றுலா வேன் மரத்தில் மோதிய விபத்தில், அதிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி, மைசூர் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தனியார் சுற்றுலா வேன் (கேஎல்08 எஆர்-5799) மூலம் நேற்று அதிகாலை கோழிக்கோடு சாலை வழியாக கூடலூர் நோக்கி வந்தனர். அதிகாலை காலை 5.00 மணி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது, வேன் கட்டுபாட்டை இழந்து மரத்தின் ஓரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. விபத்தில் வாகனத்திலிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர் ஷ்ட வசமாக உயிர் தப்பினர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை