உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தகராறு செய்தவர் கைது

தகராறு செய்தவர் கைது

கூடலூர் : கூடலூர் நந்தட்டியில் குடிபோதையில் ரேஷன் கடை ஊழியர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.கூடலூர் சலிவயல் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (48). இவர் நேற்று முன்தினம் மாலை நந்தட்டி ரேஷன் கடைக்கு சென்று விற்பனையாளர் தொட்டுமாறனிடம் (52) சர்க்கரை கேட்டுள்ளார். அவரிடம் ரேஷன் கார்டு இல்லாததால், விற்பனையாளர் சர்க்கரை தர மறுத்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த வேலுச்சாமி கடையினுள் நுழைந்து விற்பனையாளர் தொட்டுமாறன், அளவையர் ராமதாஸ் (35) ஆகியோரை தாக்கியதுடன், கடையினுள் இருந்த அரிசி மூட்டைகளை தூக்கி வீசி வழங்கல் பதிவேட்டையும் கிழித்துள்­ளார்.பின்னர் கடை ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் கடையை திறந்து ஊழியரை மீட்டனர். சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர். இது குறித்து கூடலூர் தாசில்தார் உதயகுமாரி விசாரணை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை