கோவில் கும்பாபிஷேம்
கோத்தகிரி : கோத்தகிரி சுள்ளிகூடு சர்குரு எத்தப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 10ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஐயனின் சிலை எடுத்தும் வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நாளான நேற்று முன்தினம் அதிகாலை 3.00 மணிமுதல் 6.30 மணிவரை மைசூர் சாம்ராஜ் நகர் சதானந்த சுவாமி மற்றும் இட்டக்கல் பசுவேஸ்வரர் மடாதிபதி சிவகுமார சுவாமி அருளாசில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10.00 மணிக்கு ஆராதனை பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பகல் 1.30 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நேற்று ஆடல் பாடலுடன் விழா நிறைவவடைந்தது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் லிங்கன், கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.