உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மீட்கப்பட்ட கடமான்

மீட்கப்பட்ட கடமான்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் வழி தவறி ஊருக்குள் வந்த கடமான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சேரங்கோடு பஜார் பகுதியையொட்டிய குடியிருப்பு அருகே நேற்று காலை சோர்வான நிலையில் கடமான் ஒன்று படுத்திருந்தது. அதனை கண்ட பொதுமக்கள் கடமானுக்கு பால் கொடுத்ததுடன், சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு வந்து கடமானை மீட்டு வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இங்கு பராமரித்து வனபகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி