உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொங்கலூரில் 1,008 சங்காபிஷேகம்

பொங்கலூரில் 1,008 சங்காபிஷேகம்

அன்னூர் : பொங்கலூரில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம் நடந்தது. குரோதி ஆண்டில், மக்களின் நன்மைக்காகவும், அனைத்து ஜீவராசிகள் நலம் பெற வேண்டியும், பொங்கலூரில், சேமார் குலம், குருவம்மாள், குருவப்ப நாயுடு கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் 1008 சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேக பூஜை நடந்தது. இத்துடன் ஹோமம் நடைபெற்றது. விழா கமிட்டி நிர்வாகிகள் சுரேஷ்குமார், கரி வரதராஜ் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ