உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 126வது மலர் கண்காட்சி!தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கி 10 நாள் வண்ணமயம்:சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலை ரயில் வடிவமைப்பு

126வது மலர் கண்காட்சி!தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கி 10 நாள் வண்ணமயம்:சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலை ரயில் வடிவமைப்பு

ஊட்டி:ஊட்டியில், 126வது மலர் கண்காட்சியை ஒட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலை ரயில் மற்றும் குழந்தைகளை கவரும் 'டிஸ்னி வேல்டு' ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 126 வது மலர் கண்காட்சி இன்று, 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சியை ஒட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன், பாத்திகளில், 270 ரகங்களில், 'இன்கா மேரி கோல்டு, டேலியா, டெய்சி, ஜின்னியா, ருகன்டிடப்ட், ஸ்டாக், சால்வியா, அஜிரேட்டம், டெய்சி ஒயிட், டெல்பினியா, அந்துாரியட்,' என, 10 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஒரு லட்சம் கார்னேஷன் மலரில் பாரம்பரிய ஊட்டி மலை ரயில் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் (டிஸ்னி வேல்டு) ரோஜா, கார்னேஷன் என, ஒரு லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சம் மலரில் பொம்மை, மலர் குடை என பல்வேறு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

40 ஆயிரம் மலர் தொட்டிகள்

மேலும், பூங்கா மாடங்களில், 'பிரஞ்சு மேரி கோல்டு, குட்டை சால்வியா, ஸ்டாக், மஞ்சள் டெய்சி,' உள்ளிட்ட, 40 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒயிட், மஞ்சள், ஆரஞ்சு, பிங்க் நிறங்களில், 15 ஆயிரம் தொட்டியில் லில்லியம் மலர்கள் மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், அரசு துறை மற்றும் தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சியை ஒட்டி, 4,000 ரகங்களில், 40 ஆயிரம் ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூத்து குலுங்குகிறது.நிகழ்ச்சியில் முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மை உழவர் உற்பத்தி செயலர் அபூர்வா, கலெக்டர் அருணா, தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, 10 நாட்கள் நடக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் அலங்காரம் தயார்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ